×

பொன்னமராவதி பகுதியில் கூடுதல் மகசூலுக்கு மண் பரிசோதனை செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை

பொன்னமராவதி,மே10: பொன்னமராவதி பகுதி விவசாயிகள் கூடுதல் மகசூலுக்கு மண் பரிசோதனை செய்ய வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் ரஹ்மத் நிசா ஆலோசனை கூறியுள்ளார். பொன்;னமராவதி வட்டார விவசாயிகளுக்கு மண் பரிசோதனை செய்ய வேளாண்துறை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொன்னமராவதி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் நடைபெற்று வரும் மண் மாதிரிகள் சேகரிக்கும் முகாம்களில் கலந்து கொண்டு விவசாயிகள் பயன் பெறுமாறு பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குனர் ரஹ்மத் நிசா பேகம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பொன்னமராவதி வட்டாரத்தில் நடப்பு 2024-25 ஆண்டிற்கான தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் இடையாத்தூர், மைலாப்பூர், கொன்னைப்பட்டி, காரையூர், எம்.உசிலம்பட்டி, கண்டியாநத்தம், காட்டுப்பட்டி, கொப்பனாப்பட்டி ஆகிய எட்டு பஞ்சாயத்துக்களில் மண் மாதிரிகள் சேகரிக்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

எனவே, விவசாயிகள் இந்த மண் மாதிரி முகாம்களில் கலந்து கொண்டு தங்களின் சாகுபடி நிலத்தில் மண் மாதிரிகளை சேகரித்து மண் பரிசோதனை செய்திட தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மண் மாதிரிகளை சேகரித்து குடுமியான்மலை மண் பரிசோதனை நிலையத்திற்கு அனுப்ப வேண்டும். மேலும், மண் பரிசோதனை ஆய்வு முடிவுகளை பெற்று அதனடிப்படையில் சாகுபடிக்கு தேவையான உரங்களை தேவையான அளவு இடுவதன் மூலம் உர செலவு குறைகிறது மகசு+லும் அதிகரிக்கிறது. பேருட்ட சத்துக்கள் மட்டுகில்லாமல் மண்ணில் உள்ள நுண்ணூட்டசத்துக்களின் அளவையும் தெரிந்து கொண்டு உரம் இடுவதால் பயிரின் வளர்ச்சி சீராகவும் மகசு+ல் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மண் பரிசோதனை அடிப்படையில் உரமிட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மண் சேகரிப்பு முகாம் காட்டுப்பட்டி கிராமத்pல் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. ஆப்போது விவசாயிகளுக்கு குறிதது செயல் விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இதில் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) செல்வி , பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குனர் திருமதி ரஹ்மத் நிசா பேகம் , பொன்னமராவதி வட்டார வேளாண்மை அலுவலர் வேணி, துணை வேளாண்மை அலுவலர் முருகன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொன்னமராவதி வட்டாரத்தில் நடப்பாண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் நடைபெற்று வரும் மண் மாதிரிகள் சேகரிக்கும் முகாம்களில் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறுமாறும், கூடுதல் விபரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறும், பொன்னமராவதி வேளாண்மை உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

The post பொன்னமராவதி பகுதியில் கூடுதல் மகசூலுக்கு மண் பரிசோதனை செய்ய வேண்டும்: விவசாயிகளுக்கு வேளாண் உதவி இயக்குனர் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Ponnamaravati ,Assistant Director ,Agriculture ,Rahmat Nisa ,Pon ,Namravati ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில்குறைந்த நீரை...